இடது கைவிரலில் முறிவு ஏற்பட்டதன் காரணமாக சிம்பாவேக்கு எதிரான இந்திய அணியின் தொடரிலிருந்து லெக் ஸ்பின்னர் கரன் ஷர்மா விலகியுள்ளார்.
எனினும் இவருக்கு பதிலாக மாற்றுவீரர் எவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் அறிவிக்கப்படவில்லை.
நாளை(7) சிம்பாவேக்கு பயணமாகவுள்ள இந்திய அணி எதிர்வரும் 10ஆம் திகதி முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது.
இப்போட்டித்தொடரில் தோனி, கோலி, தவான், ரெய்னா, ரோஹித் ஷர்மா, அஷ்வினுக்கு ஓய்வழிக்கப்பட்ட நிலையில் ரகானே அணிக்கு தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.