துருக்கியில் இடம்பெற்ற படகு விபத்தில் 28 பேர் பலியாகினர்.
துருக்கியில் இருந்து கிரீசுக்கு சென்று கொண்டிருந்த படகே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நான்கு கைக்குழந்தைகள் மற்றும் 10 சிறுவர்களும் பலியானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டு மோதல்களால் 126 அகதிகள் துருக்கியில் இருந்து கிரீஸிற்கு படகு மூலம் சென்ற நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கடலில் தத்தளித்த 98 பேர் கடலோர காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.