சுவிட்சர்லாந்தில் புகலிட கோரிக்கையாளர்களை ஏற்க மறுப்பு தெரிவித்த கிராமம் ஒன்றுக்கு அந்நாட்டு அரசாங்கம் அபராதம் விதித்துள்ளது.
உள்நாட்டு யுத்தம், ஸ்தீரமற்ற பொருளாதாரம் போன்ற காரணங்களினால் சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகளவான புகலிட கோரிக்கையாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளனர்.
இவ்வாறு வருகைத்தரும் 50 ஆயிரம் புகலிட கோரிக்கையாளர்களுக்கு அடைக்களம் வழங்குவதற்கு 26 ஐரோப்பிய நாடுகள் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள சுவிட்சர்லாந்து, 10 புகலிட கோரிக்கையாளர்களை அங்குள்ள ஒபாவில்-லியவி என்ற கிராமத்தில் தங்க வைப்பதற்கு தீர்மானித்தது.
எனினும், குறித்த புகலிட கோரிக்கையாளர்களை ஏற்க மறுப்பு வெளியிட்ட அக்கிராமத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் அபராதம் விதித்துள்ளது.