
உடனே சவுமியா, அவரிடம் இருந்து தப்பிக்க முயன்றார். அப்போது, சவுமியாவை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிய கோவிந்தசாமி, பின்னர் கற்பழித்துக் கொன்றார். கோவிந்தசாமி தமிழகம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர்.
இவர் மீது கேரளா திருச்சூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தண்டனையை கேரள ஐகோர்ட்டும் உறுதி செய்தது.கோவிந்தசாமி தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த கோர்ட், சவுமியா கீழே தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி தூக்கு தண்டனையை ரத்து செய்தது. இருப்பினும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 7 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனக்கூறியுள்ளது.