அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ட்ரம்ப்பின் அந்தரங்க தகவல்கள் ரஷ்யாவிடம் இருப்பதாக, BuzzFeed நிறுவனம் ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது. உறுதிப்படுத்தப்படாத இந்த ஆவணங்கள் இப்போது உலக வைரலில் இருக்கிறது. 2013ல் ரஷ்யாவின் மாஸ்கோவில் இருக்கும் ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் ட்ரம்ப் செய்த சில விஷயங்களை ரஷ்யா பதிவு செய்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
‘FAKE NEWS’ என ஆவேசமாக ட்வீட் செய்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்க அதிபர் ஒபாமா, தன் இறுதி உரையை நிகழ்த்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.