நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் சென்றுள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவுடன் அவர் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் சென்றுள்ளார்.
இவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, டளஸ் அழகப்பெரும ஆகியோரும், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.