ஆஸ்திரியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரை கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்துவிட்டு இளைஞர் ஒருவர் அதை பொலிசாருக்கு போன் போட்டு தெரிவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரியாவின் Kitzbühel நகரில் அமைந்துள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் ஞாயிறு இரவு இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சம்பவத்தின்போது அந்த குடும்பத்தினர் தங்கியிருந்த அறையின் கதவை தட்டி உள்ளே புகுந்த 25 வயதான இளைஞர், கத்தி மற்றும் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இதில் இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து காலை 6 மணியளவில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசாரிடம், அந்த இளைஞர் நடந்தவற்றை ஒப்புவித்து ஒரு கத்தி மற்றும் துப்பாக்கியை ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து அந்த இளைஞரை கைது செய்த பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்ட 19 வயது இளம் பெண் இவரது முன்னாள் காதலி எனவும்,
தம்மிடமான உறவை முறித்துக் கொண்ட அந்த இளம்பெண் வேறு ஒரு இளைஞருடன் நெருக்கமாக பழகி வந்ததே இந்த கொலைகளுக்கு காரணம் என தெரியவந்தது.
கொல்லப்பட்டவர்கள் அந்த இளம் பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்க:ள் ஆவார்கள். Kitzbühel நகரில் தமது முன்னாள் காதலியை சந்தித்த அந்த இளைஞர், வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும்,
அதைத் தொடர்ந்து இரவு அவர்கள் தங்கியிருந்த ஆடம்பர விடுதிக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அந்த விடுதியில் தங்கியிருந்தவர்கள் பதறியதாகவும், பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.