பத்தரமுல்லை – பிரதான வீதியில் அமைந்துள்ள 4 மாடி பிரபல ஆடையகமொன்று முற்று முழுதாக தீக்கிரையாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடமெபெற்றுள்ளதாக தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆடையகத்தின் நான்காவது மாடியிலேயே தீ மூண்டதை தொடர்ந்து ஏனைய மாடிகளிலும் தீ பரவியுள்ளது.ட
எனினும் குறித்த விபத்தில் உயிரிழப்புக்களும் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கோட்டை தீயணைப்பு படையினருக்கு சொந்தமான 7 வாகனங்கள் , தீயணைப்பு படையினர் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிசார் முன்னெடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிகபட்டுள்ளது.