பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்த வருடம் மூன்றாவது சீசன் தொடங்கி சமீபத்தில் பரபரப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பாடகர் முகேஷ் பிக்பாஸ் பட்டத்தை வென்று 50 லட்சம் பரிசுத் தொகையை பெற்றார்.
மேலும் நடன இயக்குனரான சாண்டி இரண்டாவது இடத்தையும் லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் 3 வது, நான்காவது இடத்தையும் பிடித்தனர். ஒவ்வொருவரும் தங்களுடைய வெற்றியை கொண்டாடுவதற்கு பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
அதுபோலவே, மிகவும் நெருங்கிய தோழியாக இருந்த சாக்ஷி, ஷெரின் தற்போது பார்ட்டி, ஹோட்டல் ஒன்றாக சுற்றி வருகின்றனர். ஒன்றாக இருவரும் சேர்ந்து சேரன் வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்டனர்.
தற்போது ஷெரின் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் பாரம்பரிய உடையான புடவை அணிந்து மிகவும் அழகாக போஸ் கொடுக்கின்றார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் வெகுவாக ரசித்து கொண்டாடி வருகின்றனர்.