குளிப்பது என்பதே பலருக்கு தனி சுகம் தான். அதிலும் கடல், ஆறு, குளங்களில் குளிப்பது என்றால் எவ்வளவு பெரிய ஆனந்தம் என்பது அனுபவித்தவர்களுக்கே தெரியும்.
அதே வேளையில் அங்கு குளிக்கையில் எதிர்பாராத விதமாக நடக்கும் அசம்பாவிதங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்துகின்றன. அது போல தற்போது ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுகோட்டை மாவட்டம் அன்னவாசல் கிராமம், மன்ன வேளான்பட்டி பள்ளிக்கூட மாணவர் அருண்குமார் பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிறகு அருகிலுள்ள குளத்தில் குளிக்க சென்றிருந்தாராம். சிறுவனின் மூக்கில் ஏதோ புகுந்ததால் வலி ஏற்பட்டு பெரும் தொந்தரவை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஏற்பட்ட வலியால் அவதிக்குள்ளான சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அவனுடைய மூக்கில் சிறிய மீன் ஒன்று சிக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அது வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
குளத்தில் குளித்தபோது சிறுவனின் மூக்கில் சிக்கிய மீன்…!
Youtube Subscribe► https://t.co/MXGpEXH6Xu | #Pudukottai pic.twitter.com/ssgHok0wOk
— News7 Tamil (@news7tamil) November 13, 2019