திமுக பிரமுகர்கள் இருவர் இளம்பெண்ணை மயக்கலட்டு கொடுத்து சீரழித்து வீடியோ எடுத்து வருவதாக மனு கொடுத்த விவகாரம்.
இதுகுறித்து தனியார் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி குறிப்பில், “சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கு பிரியா (21)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியும், ஒரு வயதில் குழந்தை ஒன்றும் இருக்கின்றது. தச்சு தொழிலாளியாக கணேஷ் பணிபுரிந்து வருகின்றார். அவர் வெளியூரில் வேலை செய்து வருகின்றார்.
நெசப்பாக்கத்தில் இருக்கும் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அதில், பிரியா கலந்து கொண்டு பொங்கல் வைத்துள்ளார். திமுக பிரமுகர்கள் ஹரிஷ் குமார், ரமேஷ் குமார் ஆகியோர் இந்த விழாவினை முன்னின்று நடத்தியுள்ளனர். அதன் பின்னர் பிரியாவிடம் நைசாக பேச்சு கொடுத்து அவர் கணவர் வீட்டில் இல்லாதது தெரிந்து கொண்டுள்ளனர்.
பிரியாவிற்கு கோவிலில் பிரசாதம் எடுத்து வந்ததாக கூறி லட்டு கொடுத்து உடனே சாப்பிடும்படி வற்புறுத்தியுள்ளனர். அந்த லட்டை சாப்பிட்ட பிரியா உடனடியாக மயங்கி விழுந்துள்ளார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்ததில் ஆடைகள் அலங்கோலமாக இருந்தது. இருவரும் சேர்ந்து அவரை மானபங்கப்படுத்திய தெரிய வந்துள்ளது.
ஹரிஷ் குமார் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளதாக கூறி மிரட்டி பத்தாயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அம்பத்தூர் வர சொல்லி இருக்கின்றார். அங்கே அவரை குளிர்பானம் கொடுத்து குடிக்க சொல்லி வற்புறுத்தி மயக்கி மூன்று பேர் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.
அதனையும் படம் எடுத்து வைத்துக்கொண்டு 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் தன்னுடைய கணவருக்கு தெரிவிக்க அவர்கள் இருவரும் சேர்ந்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், அவர்கள் வழக்கு பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர்.
நகைக்கு பதிலாக 90 ஆயிரம் பணம் வாங்கி தருவதாக கூறி மிரட்டி இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த எட்டாம் தேதி கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து கணவன் மனைவி இருவரும் கூறியுள்ளனர்.
ஆனால் மனுக்களை பெரும் பிரிவில் இருந்த பெண் காவல் அதிகாரி விருகம்பாக்கம் காவல் துறையினர் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதன் காரணமாக தம்பதிகள் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.” என்று கூறப்பட்டுள்ளது.