காலி – தலாபிட்டிய மற்றும் இரத்தினபுரி நிவித்திகல – கெட்டனிகேவத்த பள்ளிவாசல்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்ற கடந்த 16ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இரு பள்ளிவாசல்கள் மீதும் கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளிவாசல்களின் யன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி – நிவித்திகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெட்டனிகேவத்த பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது நேற்றையதினம் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நிவித்திகல பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரைக் கைது செய்துள்ளனர்.
மேலும் பிரதேசத்தின் சி.சி.ரி.வி. காணொளிகளை மையப்படுத்தி முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் முச்சக்கர வண்டியில் அவ்விருவரும் வந்து தாக்குதல் நடத்துவது தெரியவந்துள்ள நிலையிலேயே அ அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.