#அக்காள்##இன்னொரு##தாய்#
முன் ஜென்ம பயன் பெற்றோர்
பெண் சகோதரிகளோடு பிறப்பராம்
அன்பென்ன துடிப்பென்ன
கண்போல காக்கும் அவர் பண்பென்ன பாசமென்ன சொல்லிக்கொண்டே போகலாம்
நடைமுறை வாழ்விலும் நாடுகள் தாண்டியும் அறிந்த உணர்ந்த விடயமதை
சொல்லித்தானே ஆகவேண்டும்
ஆறு வயதிலேயே தாய்மை உணர்வோடு-தன்
தங்கை உயிர் காத்து மாண்டுபோனாளே!-இப்
பிஞ்சை நெஞ்சுருகி அழுது போற்றுகிறேன்-அவள்
நேசத்திற்கு நான் என்ன கைம்மாறு உரைப்பேன்!!.
(அன்புடன் கஜானன்)