பிரித்தானியாவை சேர்ந்த ஒரு இளம்பெண் தன்னை 10 வயதில் பாலியல் வன்கொடுமை செய்த நபரை பல வருடங்களுக்கு பின் நேரில் பார்த்ததும் அதிர்ச்சியில் கூச்சலிட ஆரம்பித்துள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான பிரையன் டிக் (49) என்பவர் பக்கத்து வீட்டை சேர்ந்த 10 வயது சிறுமியை பத்திரமாக கவனித்துக்கொள்கிறேன் என கூட்டு, 18 மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி ஒருமுறை தன்னுடைய பாட்டியிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் பிரையனை கைது செய்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அவர் மீது குற்றம் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 2011ம் ஆண்டு அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை எப்போதாவது சந்திக்க நேர்ந்தால், உடனடியாக அந்த இடத்தில் இருந்து பிரையன் வெளியேற வேண்டும் எனவும் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது 21 வயதான லாரா குக் என்கிற அந்த சிறுமி, சமீபத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதே மருத்துவனையில் பிரையனும் கெத்தாக அமர்ந்திருந்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த லாரா கூச்சலிட ஆரம்பித்துள்ளார்.
விரைந்து வந்த மேலாளர், லாராவிடம் மன்னிப்பு கோரியதோடு, அந்த நபரை உடனடியாக வெளியேற்றி விடுகிறோம் என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கூறியுள்ள லாரா, தனக்கு சிறுவயதில் அத்தகைய சம்பவம் நடந்ததிலிருந்தே பெரும் பயத்துடன் இருந்து வருவதாகவும், வீட்டிலிருந்து வெளியேறுவதற்கே அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார்.