காதலித்த பெண் தன்னுடனான பழக்கத்தை குறைத்துக்கொண்டமையால் மாணவன் ஒருவன் தனது காதலி மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி மீதே சக மாணவர் இவ்வாறு ஆசிட் வீசியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்…
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிபிஇஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வரும் 24 வயதுடைய முத்தமிழன் என்ற மாணவன் அதே வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஏதோ காரணத்தால் முத்தமிழனின் பழக்கத்தை அந்த மாணவி குறைத்துக்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழன் மாணவி மீது ஆசிட் வீசியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மாணவி அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே முத்தமிழனை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். காயமடைந்த முத்தமிழனும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தகவலறிந்த பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.