நிபந்தனையை ஏற்றாலே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிவில் அமைப்புகளும் ஏனையவர்களும் பரிசீலிக்குமாறு தன்னைக் கேட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்றால், “நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்காகவே போட்டியிடுவேன். அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து கட்சி உறுப்பினர்களும் சம்மதம் தெரிவிக்க வேண்டும்” என நிபந்தனைகளை அவர் முன்வைத்துள்ளார்.