நாடு முழுவதும் மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
சம்பள முரண்பாடுகளை காரணம் காட்டியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இது தொடர்பில் அமைச்சரவைக்கு ஆவணம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 8 மணி தொடக்கம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமாக இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.