மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை புதிதாகப் பதவியேற்றுள்ளனர்.
மனோஜ் சிறிசேன, டி.பி. ஹேரத், சாந்த பண்டார, ஆகியோரே உப சபாநாயகர் ஆனந்த குமாரசிறி முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
குருநாகல் மாவட்டத்தின் எம்.பியான சாலித திஸநாயக்கவின் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு டி.பி. ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல மாத்தறை மாவட்ட எம்.பியான சந்திரசிறி கஜதீரவின் இறப்பின் பின்னான வெற்றிடத்தை மனோஜ் சிறிசேன நிரப்பியுள்ளார்.
சாந்த பண்டார ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பியாக இரண்டாவது தடவையாக பதவியேற்றுள்ளார்.