அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் இருந்து புறப்பட்ட டெல்டா விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று நடுவானில் 30,000 அடி குத்திட்டு சரிந்து விழுந்ததில் மரண பயத்தில் பயணிகள் அலறிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் அட்லாண்டாவில் இருந்து டெல்டா விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று ஃபோர்ட் லாடர்டேல் பகுதிக்கு புறப்பட்டு சென்றுள்ளது.
பயணத்தின் பாதி தூரம் கடந்த நிலையில் விமானம் திடீரென்று 30,000 அடியில் இருந்து 10,000 அடிக்கு குத்தித்து சரிந்து விழுந்துள்ளது.
7 நிமிடத்தில் நடந்த இச்சம்பவத்தால் அந்த விமானத்தில் இருந்த பயணிகள் மரண பயத்தில் அலறியுள்ளனர்.
பெரும்பாலானவர்கள் தங்கள் உற்றார் உறவினர்களுக்கு இனி நாங்கள் பிழைக்க வாய்ப்பில்லை என இறுதி தகவலையும் அனுப்பியுள்ளனர்.
இது குறித்து தகவல் பகிர்ந்து கொண்ட ஒரு பயணி, திடீரென்று விமானம் குத்திட்டு சரிந்ததால், பயணிகள் அலறினர்.
மட்டுமின்றி அதேவேளை ஆக்சிஜன் மாஸ்குகளும் வெளிப்பட்டதால் விமானத்தினுள் ஒரு கலவர சூழல் ஏற்பட்டது என்றார்.
ஆனால் விமான ஊழியர்கள், எவரும் பீதி அடைய வேண்டாம் என தொடர்ந்து கத்தியவாறே இருந்தனர்.
அது மிகவும் மோசமான தருணம். பயணிகள் கண்டிப்பாக மரண பயத்தில் இருந்திருப்பார்கள் என்றார்.
சுமார் 90 நொடிகள் என்ன செய்வதன்றே தெரியவில்லை என கூறும் பயணி ஒருவர், அந்தரத்தில் 15,000 அடியில் இருக்கும் போது கண்டிப்பாக அது பீதியை ஏற்படுத்தும் தருணமே என்றார் அவர்.
இதனிடையே குறித்த விவகாரத்தை அடுத்து அந்த விமானம் அவசரமாக தம்பா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.