துணை நடிகை ஒருவர் அவரது கணவர் மற்றும் கணவனின் முதல் மனைவியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் சென்னையில் உள்ள திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.
சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியில் வசித்து வரும் இந்த துணை நடிகை (வயது 39) செனாய் நகர் பகுதியில் இவருக்கென சொந்தமாக அழகு நிலையம் மற்றும் யோகி பயிற்சி கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
மான் கராத்தே படத்தில் இந்த நடிகைக்கு பழக்கமானவர் தான் சரவணன் சுப்பிரமணி. இவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி உங்களை மணக்க விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார், பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் கொண்டார்கள்.தற்போது நடிகை அளித்துள்ள இந்த புகாரில் சரவணன் நடிகையின் நகைகள், சொத்துக்கள், வருமானத்தை அபகரித்து வந்துள்ளார். நண்பர்களுடன் பாலியல் ரீதியாக நடிகைக்கு தொல்லை தருவதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும், அந்த புகாரில் தன்னுடைய 2 மகன்களை அடித்து துன்புறுத்திதால் தான் அவரை விட்டு விலகி வாழ்ந்ததாகவும் தெரிவித்தார். மேலும் சுப்பிரமணிக்கு ஏற்கனவே ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், அதனை தன்னிடம் இருந்து மறைத்து திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தார். அவரது மகன்களுக்கு திண்டுக்கல் சரவணன் என்ற அடியாள் மூலம் கொலை மிரட்டல் கொடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.