கற்றாழை செடி ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட மிகவும் அற்புதமான ஓர் செடி. இந்த செடியின் இலைகளில் இருந்து வெளிவரும் ஜெல் பல்வேறு சரும பிரச்சனைகளை சரிசெய்யப் பயன்படுத்தப்பட்டு வருவது அனைவருக்கும் தெரியும்.
ஏனெனில் இந்த ஜெல்லில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பொருள் உள்ளது.
அத்தகைய கற்றாழை ஜெல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
- அதற்கு இந்த கற்றாழை ஜெல்லை ஜூஸ் போட்டு குடித்து வர வேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், தற்போது மக்கள் அதிகம் சந்திக்கும் பல பிரச்சனைகள் தடுக்கப்படும்.
- கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் உடனே விலகும். மேலும் கற்றாழை ஜூஸ் மலக்குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
- உங்களுக்கு செரிமான கோளாறுகள் அடிக்கடி ஏற்படுமாயின், தினமும் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதும் விலகும்.
- நீரிழிவு நோயாளிகள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வருவது நல்லது. ஏனெனில் கற்றாழை ஜூஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க உதவும்.
- உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால், தினமும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள்.
- இதனால் கற்றாழை ஜூஸில் உள்ள சேர்மங்கள், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றிவிடும்.
- எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு, கற்றாழை ஜூஸ் மிகவும் அற்புதமான ஓர் பானம்.
- உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
- தற்போது பலருக்கும் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதில்லை.
- இதனால் தான் அடிக்கடி நோயால் பாதிக்கப்படுகின்றனர். உங்களுக்கு அடிக்கடி உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமாயின், கற்றாழை ஜூஸை தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வாருங்கள். இதன் மூலம் நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
- தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், உடலினுள் உள்ள பாதிக்கப்பட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படும்.
- இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
- கற்றாழை ஜூஸ் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையடையச் செய்யும்.
- எனவே உங்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ள நினைத்தால், கற்றாழை ஜூஸை காலையில் குடித்து வாருங்கள்.
- கற்றாழை ஜூஸ் உடலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கும். எனவே உங்களுக்கு புற்றுநோய் தாக்கக்கூடாது என்று நினைத்தால், இந்த ஜூஸை தினமும் குடியுங்கள்.