சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதிலிருந்து பக்தர்கள், பொலிஸார் மற்றும் கோயில் ஊழியர்கள் உட்பட இதுவரை 39 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த 16 ஆம் திகதி மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
இந்நிலையில் தொற்று பாதித்த 39 பேரில் 27 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் உடனடியாக கொரோனா சிகிச்சை மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து கொரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் அடிப்படை முகாம்களில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கோயிலுக்கு வருபவர்களுக்கு கொரோனா சோதனை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பிறகே ஐயப்பன் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றாளர்கள் ஆலயத்தில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து சோதனை நடைமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது