தற்போதைய வாழ்க்கை முறையில் கண் பார்வை பிரச்சினை காரணமாக மூக்கு கண்ணாடி அணிந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கண்பார்வையை தெளிவாக வைக்க தினசரி சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அப்படியான உணவுகளை எடுத்து கொண்டால் எவ்வளவு வயதானலும் கண்பார்வை தெளிவாக இருக்கும்.
நெல்லிக்காய்
கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை ஆற்றல் அதிகரிக்கும்.
அன்னாசிபழம்
அன்னாசிப்பழத்தை எடுத்து தோல்களை சீவி சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.
சீரகம்
சம அளவு சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தன்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.
பொன்னாங்கண்ணி
பொன்னாங்கண்ணி இலையை சிறிதளவு எடுத்து காலையில் மென்று தின்று பின்பு பால் குடித்து வந்தால் கண்பார்வை தெளிவாக இருக்கும்.
அருநெல்லி
அருநெல்லிக்காயை வடாகம் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் தேகத்திற்க்கு குளிர்ச்சியும் கண்களுக்கு பிரகாசமும் கிடைக்கும்.