ரம்யா பாண்டியனைத் தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டிலிருந்து சோம் சேகர் வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 4’ நிகழ்ச்சியின் பிரமாண்டமான இறுதிப் போட்டி இன்று மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது.
இந்நிலையில் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு இந்நிகழ்ச்சி விஜய் டிவி-யிலும், ஹாட் ஸ்டாரிலும் ஒளிபரப்பாகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்களைக் கடந்து, ரம்யா பாண்டியன், ரியோ ராஜ், ஆரி, சோம் மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகிய 5 பேரும் வீட்டில் இருந்தனர்.
இதில் 5-வது இடம் பிடித்து, ரம்யா பாண்டியன் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4-ல் நான்காம் இடம் பிடித்து சோம் சேகர் வெளியேற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது.
ரம்யாவையும், சோமையும் இணைத்து ஒரு மெல்லிய காதல் கிசு கிசு ரசிகர்களிடம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் இருவரையும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளது.