எக்குவடோரியல் கினியாவில் தொடர்ச்சியான குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிரதான நகரமான பாட்டாவில் ஒரு இராணுவ முகாம்களுக்கு அருகில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சுமார் 420 பேர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இராணுவ முகாம்களில் டைனமைட் சேமிப்பது தொடர்பில் ஏற்பட்ட அலட்சியம் காரணமாக இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், இடிபாடுகளில் தப்பியவர்களைத் தேடுவதையும், இடிந்து விழுந்த கட்டிடங்களிலிருந்து குப்பைகளை நீக்கம் செய்வதையும் அரசு தொலைக்காட்சி காட்டியுள்ளது.
இதனிடையே, தன்னார்வ சுகாதார ஊழியர்களை பாட்டா பிராந்திய மருத்துவமனைக்கு செல்ல சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
மட்டுமின்றி, அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் காரணமாக இரத்த தானம் செய்யவும் சுகாதார அமைச்சகம் கேட்டுள்ளது.