வடகொரியா முன்னெப்போதையும் விட மோசமான நிலைமையில் இருக்கிறது என அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாயன்று பியோங்யாங்கில் நடைபெற்ற தொழிலாளர் கட்சியினருடனான, அரசியல் மாநாட்டின் பேசும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் பேசிய அவர்,
வட கொரியாவின் பொருளாதாரம் – ஏற்கனவே தவறான நிர்வாகம் மற்றும் அணு ஆயுதத் திட்டத்தின் (nuclear weapons program) மீதான அமெரிக்கா தலைமையிலான பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றால் பேரழிவிற்குள்ளான நிலையில், கொரோனா வைரஸால் ஏற்பட்ட முடக்கம் காரணமாக அதள பாதாளத்திற்குச் சென்றுவிட்டது.
இதுவரை இல்லாத வகையில் ஏராளமான சவால்களை நாம் கடக்க வேண்டிய மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறோம்.
இதனை நிவர்த்திசெய்ய கட்சி, கட்சியின் அடிமட்ட அமைப்புகள் முக்கியமாக பங்களிக்க வேண்டும் என்று கிம் கூறினார்.