கனடாவின் பசிபிக் கடற்கரையில் தீப்பற்றி எரிந்த ரசாயனங்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இந்து நச்சு வாயுவை வெளியேறுவதால் அருகில் உள்ள பகுதிக்கு பெரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக உள்ளதாக சுற்றுச்சழல் அமைப்பு எச்சரித்துள்ளது.
சனிக்கிழமையன்று, வான்கூவர் நோக்கிச் சென்ற போது Zim Kingston என்ற சரக்கு கப்பல் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தலைநகர் விக்டொரியாவிற்கு அருகே உள்ள கடற்கரையில் Zim Kingston கப்பலில் இருந்த கண்டெய்னர் தீப்பற்றி எரிந்துள்ளது.
எப்படி தீ ஏற்பட்ட என்பது இன்னும் தெரியவில்லை.
ரசாயனங்கள் இருந்த கண்டெய்னரில் தீப்பிடித்துள்ளதாகவும், அதனால், நச்சு வாயு வெளியேறுவதாக கனடா கடலோர காவல்படை தெரிவித்திருந்தது.
52,000 கிலோ ரசாயன பொருட்களை கொண்டுள்ள இரண்டு கண்டெய்னரில் தீப்பிடித்து எரிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தீப்பற்றி எரியும் கப்பலில் இருந்து நச்சு வாயு வெளியேறுவதால் அருகில் உள்ள பகுதிக்கு பெரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக உள்ளதாக சுற்றுச்சழல் அமைப்பான அறக்கட்டளையின் தலைவர் Surfrider எச்சரித்துள்ளார்.
#CCGLive: Active fire fighting is underway at the M/V #ZimKingston and we are seeing a reduction in fire and smoke. Gale force winds are predicted for the area. Teams will be monitoring air quality both on the water and on shore.
— Canadian Coast Guard (@CoastGuardCAN) October 24, 2021