தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், அயலான், டான் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டாக்டர்’. நெல்சன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. உலகளவில் வெளியான இப்படம் இதுவரை 90 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இதன்மூலம் சிவகார்த்திகேயன் நடித்ததில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை ‘டாக்டர்’ படைத்துள்ளது.
இவ்வாறு ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வரும் ‘டாக்டர்’ படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர வருகிற நவம்பர் 5-ந் தேதி இப்படம் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.