சில நிறுவனங்கள் தரமற்ற பசும்பாலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து தொழிற்சாலைகளில் தண்ணீர் கலந்து குறித்த பாலை விற்பனை செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் ஒரு லிற்றர் பாலின் விலை 300 ரூபாயாக உயர்வடைந்துள்ளது. 260 ரூபாவில் இருந்து 300 ரூபாவாக தற்போது திரவப் பாலின் விலை அதிகரித்துள்ளது.
அத்துடன், தனியார் பால் மா உற்பத்தி நிறுவனங்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தி வருவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.