கூகுள் குரோமில் பலவிதமான பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து கூகுள் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இதில், 7 விதமான குறைப்பாடுகள் பாதிப்புகளை விளைவிக்ககூடியதாக உள்ளது. ஹேக்கர்களால் பிரவுசர் எளிதில் ஹேக் செய்யப்பட்டுவிடும் என்று பில்லியன் கணக்கான குரோம் பயனாளர்களுக்கு கூகுள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
இந்நிலையில் தற்போது வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த பிரவுசரில் குறைப்பாடுகளை சரிசெய்த பின் அப்டேட் வழங்கப்படும் என கூறியுள்ளது.
இதனால், குறைப்பாட்டின் மூலம் விண்டோஸ், மற்றும் MAC மற்றும் லினக்ஸ் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது,
அதோடு ஹேக் செய்யப்பட்டதற்கு யார் பொறுப்பு என்பது குறித்தும் எதுவும் தெரியவில்லை. அடுத்த சில நாட்களில் புதிய அப்டேட்டை நிறுவனம் வெளியிடும், அப்டேட் செய்யப்படும் வரை மற்ற ஹேக்கிங்கில் இருந்து நிறுவனம் பாதுகாப்பளிக்கிறது.
பாதுகாப்பு குறையின் மூலம் வளர்ச்சி தடைபடுவதை தடுத்து எங்களுடன் பணியாற்றிய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.