புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் டொலர் எண்ணிக்கையில் தொடர்ந்தும் கடுமையான வீழ்ச்சி காணப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் அண்ணளவாக 650 மில்லியன் டொலர்கள் அளவில் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர் மாதமொன்றுக்கு இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
இந்த நிலை படிப்படியாகக் குறைந்து தற்போதைக்கு மாதமொன்றுக்கு 250 மில்லியன் டொலர்கள் வரை குறைந்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட சலுகைகளை வழங்கி அவர்களின் உழைப்பை சட்டரீதியான வழிகளில் இலங்கைக்கு வரவழைத்துக் கொள்வதில் அரசாங்கம் இதுவரை போதிய கவனம் செலுத்தவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.