இயக்குநர் விக்னேஷ் சிவன்
இயக்குநர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநராக திகழ்ந்து வருபவர், இவரின் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
மேலும் விக்னேஷ் சிவன் தனது காதலியும் நடிகையுமான நயன்தாராவை சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்திற்கு பல உச்ச நட்சத்திரங்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அறிமுக திரைப்படம்
விக்னேஷ் சிவன் அடுத்து நடிகர் அஜித்தின் 62-வது திரைப்படமாக உருவாகவுள்ள AK62 திரைப்படத்தை இயக்கவுள்ளார். அப்படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனை இயக்குனராக தான் நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் நடிகராக இளம் வயதிலே நடித்திருக்கிறார். ஆம், 2007 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படமான சிவி திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் நடித்திருக்கிறார்.
அந்த படத்தில் காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.