யாழ்ப்பாணம் மற்றும் பதுளையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை இந்த மோதல் சம்பவங்கள் இடமபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை, வேவெல்ஹின்ன தோட்டத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பெண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குழு மோதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
குடிபோதையில் இந்த மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



















