ஐக்கியதேசியக்கட்சியின் தலைமைக் குறித்து முடிவெடுப்பதற்காக அதன் தலைவர் ரணில்விக்ரமசிங்க செயற்குழுவில் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள்பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது ஆதரவாளர்களுடனான சந்திப்பில்இது தொடர்பிலான அறிவிப்பைவெளியிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செயற்குழுவில்பெரும்பான்மையைப் பெறுவதற்காக அவருக்கு ஆதரவாக பல மூத்த நாடாளுமன்றஉறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளைசபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும்எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரின் ஆதரவாளர்களும் செயற்குழுவில் வாக்களிக்கத் தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



















