பதுளை – பசறை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது.
குறித்த பேருந்து உரிய முறையில் பராமரிப்பு செய்யாத காரணத்தினால் வழியிலே பேருந்து சில்லு பொருந்தும் பகுதி விலகியதால் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறாம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் 9 பேர் பலியானதுடன், 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கை போக்குவரத்து சபை தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்கவிடம், போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், விசாரணைக் குழுவால் தொகுக்கப்பட்ட விபத்துக்கான காரணங்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை அண்மையில் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
பேருந்து உரிய முறையில் பராமரிப்பு செய்யாத காரணத்தினால் வழியிலே பேருந்து சில்லு பொருந்தும் பகுதி விலகியதால் இந்த விபத்து நேர்ந்ததாக விசாரணை குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, விபத்து குறித்த விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு அமைச்சர் பணித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.