நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நுகேகொட மேலதிக நீதவான் யு.கே.பெல்பொல, ரஞ்சனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினரை குரல் பரிசோதனைக்காக பெப்ரவரி 7ஆம் திகதி காலை 10 மணிக்கு அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


















