சீனாவில் மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் கொரோனா வைரஸ் தோன்றிய வுஹான் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடந்ததாக கூறப்படுகிறது.குறித்த பெண் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் என அறியப்படுகிறது.
குறித்த வீடியோவில், பெண் ஒருவர் தரையில் கிடக்க, பாதுகாப்பு உடை அணிந்துள்ள மருத்துவர் அவரை உயிர்பிக்க சிபிஆர் சிகிச்சை அளிக்கிறார்.
இதைக்கண்ட அப்பெண்ணின் மகன் துயரம் தாங்க முடியாமல் கதறுகிறார். சில நிமிடங்கள் மருத்துவர் முயற்சித்தும் பலனிக்காததால், மகனே தனது தாயை உயிர்பிக்க சிபிஆர் சிகிச்சை அளிக்கிறார்.
எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவிக்கிறார். இதைக்கேட்ட மகன் கதறி அழுகிறார். மருத்துவமனை வளாகத்திலிருந்த அனைவரும் மகனின் ஓலக் குரலை கேட்டு வேதனைப்படுகின்றனர்.
#武汉肺炎 #WuhanCoronavirus 妈妈在医院就不行了,这一声声妈妈妈妈叫的让人听了真的是好难受。 pic.twitter.com/TTtZCEpO9Q
— kenji (@kenji_tokyo2007) February 3, 2020
இதுவரை கொரோனா வைரஸிற்கு 427 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நோய் தொற்று ஏற்பட்டுள்ள 20,688 பேரில் 2,790 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேசமயம், 730 பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



















