• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

யாழ் பாடசாலை, பல்கலைக்கழக மாணவிகளுக்கு கொலைபேசிகளாக மாறும் தொலைபேசிகள்!! வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்!! (Video)

Editor by Editor
February 7, 2020
in இலங்கைச் செய்திகள், யாழ்ப்பாணம்
0
யாழ் பாடசாலை, பல்கலைக்கழக மாணவிகளுக்கு கொலைபேசிகளாக மாறும் தொலைபேசிகள்!! வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்!! (Video)
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியில் மாணவர்கள் மத்தியில் திடீர் தற்கொலைகள் அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணமாக உள்ளது சிமாட் தொலைபேசிகள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?? இதோ அதிர்ச்சித் தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளது….

பாடசாலை, பல்கலைக்கழக மாணவிகளை, மாணவர்களை வைத்திருக்கும் பெற்றோரே!! தயவு செய்து இதைப் படியுங்கள்!! மற்றவர்களுக்கும் பகிருங்கள்…..

5 வயது முதல் 10 வயதில் எழுதும் புலமைப்பரிசில் பரீட்சை, 16 வயதில் எழுதும் ஓ.எல் பரீட்சை வரை தனது பிள்ளையின் எதிர்காலத்திற்காக அலுவலகத்தில் உயரதிகாரிகளிடம் ஏச்சு வாங்கி, திட்டு வாங்கி களவாக மோட்டார் சைக்கிளில் பிள்ளையை பாடசாலை, ரியுசனில் ஏற்றி இறக்கும் பெற்றோர் யாழ்ப்பாணத்தில் அதிகம் பேர் இருக்கின்றார்கள்.

பணக்காரர்களுடன் போட்டி போட்டு தனது பிள்ளையும் நல்ல பாடசாலையில் கற்க வேண்டும் என்ற அவாவில் மாடாய் உடல் தேய்ந்து உழைத்து படிப்பிக்கும் ஏழைப் பெற்றோரும் யாழில் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள். இவ்வாறு தனது பிள்ளைகளை கனவுகளுடன் கற்பிக்கும் பெற்றோரில் பலர் தமது பிள்ளைகளால் ஏமாந்து போவது எப்போது???

பெரும்பாலான பெற்றோர் தமது பிள்ளைகளை கட்டிளம் வயதில் கருசணையுடன் கவனிக்கத் தவறுகின்றனர். பாடசாலை விட்டவுடன், சனி, ஞாயிறு ரியுசன் செல்வது என திரியும் பிள்ளைகளை சிறுவயதில் கவனிப்பது போல் கவனிக்கத் தவறுகின்றார்கள்.

பிள்ளைகளுக்கு சிமாட் போனை வாங்கிக் கொடுத்து அவர்களை மெல்லக் மெல்லக் கொலை செய்யும் செயற்பாட்டுக்கு உள்ளாக்குகின்றார்கள். கட்டிளம்பருவத்தில் உள்ள பிள்ளைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் பாடசாலை, ரியுசன் நடவடிக்கைகளுடன் கைத்தொலைபேசிகளையும் கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக தற்போது உருவாகியுள்ளது.

வாசிப்பதற்கும் பகிர்வதற்கும் கூசும் சில உண்மைச் சம்பவங்கள் இங்கு தரப்படுகின்றன. யாழ் நகரப்பகுதிக்கு ரியுசனுக்காக வந்த 18 வயது மாணவி யாழ் நகரப்பகுதியில் நடைபாதைக் கடையில் ஆடை விற்கும் ஒருவனிடம் ‘மருத்துவபீட மாணவன்” என நம்பி ஏமாந்து அங்குள்ள விடுதியில் காதல் என்ற போர்வையில் பலதடவை அவனால் உடலுறவுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் அவளுடன் உறவு கொள்ளும் போது எடுத்த வீடியோக்களையும் தனது சகபாடியிடம் காட்டி மகிழ்ந்துள்ளான்.

அதே சகபாடிகளுக்கு அவளை விருந்தாக்க முற்பட்ட போது குறித்த மாணவி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டாள். இவ்வளவுக்கும் காரணம் அந்த மாணவி வைத்திருந்த சிமாட் போனில் ஏற்பட்ட தொடர்ச்சியான தொடர்பே.

யாழ் பல்கலைக்கழகத்தின் குறித்த பீடத்தில் 3ம் வருடத்தில் கற்கும் மாணவன் ஒருவன் ராக்கிங் என்ற போர்வையில், ஏ.எல் பரீட்சை பெறுபேறு வந்து சிலநாட்களேயான நிலையில் அதே பீடத்தில் கற்க ஆயத்தமான மாணவி ஒருவரை தொடர்பு கொண்டு, மிகக் கேவலமான முறையில் அவளைக் கையாண்டுள்ளான்.

அதில் உச்ச கட்டமாக தான் சுயஇன்பம் செய்வதை வட்சப்பில் நேரடியாக பார்க்க வற்புறுத்தி பலதடவை அவளை அவ்வாறு பார்க்கச் செய்துள்ளதுடன் அவளது அந்தரங்கங்களையும் அச்சுறுத்தி காண்பிக்க செய்துள்ளான். அவனது எல்லை மீறவே தாங்கமுடியாத மாணவி தனது சகோதரிக்கு இதைத் தெரிவித்த பின்னரே சகோதரி மேற்கொண்ட புத்திசாலித்தனமான நடவடிக்கையால் அவனது கொட்டத்தை அடக்க முடிந்தது. அவனது அனைத்து சற்றிங் மற்றும் விபரங்கள் எம்மிடம் உள்ளன. குறித்த மாணவனின் முகப்புத்தகத்தை ஆராய்ந்த போது அம் மாணவனுக்கு வேம்படி மகளீர் கல்லுாரியில் கற்கும் சகோதரி உட்பட இரு சகோதரிகள் உள்ளனர். தந்தை தொடர்பாக ஆராய்ந்த போது அவர் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு மேலான ஒரு பதவில் உள்ளார்.

தாயார் அரச அலுவலர். குறித்த மாணவனின் புகைப்படத்தையும் அவன் செய்த கேவலமான செயற்பாடுகளையும் ஊடகத்தில் வெளிக்காட்டியிருந்தால் மாணவனின் குடும்பத்தில் யாராவது ஒருவர் தற்கொலை செய்திருப்பர். குறித்த பல்கலைக்கழக மாணவனுக்கும் அவனது பெற்றோருக்கும் இது தொடர்பாக உரியமுறையில் தொடர்பு எடுக்கப்பட்டு மாணவன் அடக்கப்பட்டுள்ளான்.

3 மாத காலத்துக்குள் யாழ் பல்கலைக்கழக மாணவி உட்பட நேற்றுவரை 7 இளம் யுவதிகள் தற்கொலை செய்துள்ளார்கள். இவர்கள் எதற்காக தற்கொலை செய்தார்கள் என இன்னும் பெற்றோர் அறிய முடியாத நிலையில் உள்ளார்கள். தற்கொலை செய்து உயிரிழந்த ஒரு மாணவியின் கைத்தொலைபேசியை பொலிசார் சோதனையிட்ட போது இளைஞன் ஒருவன் இன்னொரு பெண்ணுடன் உறவு கொள்ளும் வீடியோ அவளது வைபரில் உள்ளது. குறித்த இளைஞனை அவள் காதலித்துள்ளதும் அவளுடனும் அந்த இளைஞன் உறவு கொண்டுள்ள பல புகைப்படங்களும் அந்த கைத்தொலைபேசியில் உள்ளன.

குறித்த அவர்களது சற்றிங்கை ஆராய்ந்த போது அந்த இளைஞன் ஏற்கனவே திருமணமானவன் என்பதை யுவதி அறிந்தே பழகியுள்ளதும் அத்துடன் மனைவியுடன் உறவு கொண்ட வீடியோக்களையே அவன் அனுப்பியுள்ளதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் அந்த யுவதி எதற்காக தற்கொலை செய்தாள் என அந்த சற்றிங்குகளை வைத்து அறிய முடியவில்லை என பொலிஸ் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. பெற்றோரிடம் அந்த இளைஞன் யார் என கேட்ட போது அவர்களுக்கே அவன் யார் என தெரியவில்லை.

அவனது தொலைபேசி இலக்கமும் அவனது பெயரில் பதிவு செய்யப்படவில்லை என தெரியவருகின்றது. கைத்தொலைபேசிக்கு பாஸ்வேட் கொடுத்து வைத்திருந்த யுவதியின் பாஸ்வேட் அவளது இளைய சகோதரத்துக்கு தெரிந்திருந்ததால் இவற்றை அறிய முடிந்தது. இதே போல் ஓரிரு வருடத்துக்குள் மேலும் பல யுவதிகளின் தற்கொலைக்கு கைத்தொலைபேசியில் இருக்கும் ஆதாரங்களே காரணம் என அறிய முடிந்தாலும் அத் தொலைபேசிக்கு இறந்தவர்களால் கொடுக்கப்பட்டிருந்த பாஸ்வேட்டுக்களால் அவற்றை அறியமுடியாத நிலை உள்ளது என பொலிஸ்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மாணவிகள், யுவதிகள் உடல் ரீதியான உறவு கொள்வதை ஆண்களுடன் இரகசியமாக மேற்கொள்ள முயன்றாலும், ஆண்கள் உடையார் இடுப்பில் சலங்கை கட்டி உறவு கொள்வது போலான நிலையிலேயே காணப்படுகின்றார்கள்.

முக்கியமாக எந்த ஒரு யுவதியும் காதலனால் சீரழிக்கப்படுவது மிகக் குறைந்த அளவே என்பதுடன், குறிப்பாக அவர்களுடன் நெருக்கமாக பழகும் இளைஞர்கள் மற்றும் கல்விகற்கும் கூட்டாளிகள் மற்றும் குடும்பஸ்தர்களாலேயே அவர்கள் சீரழிக்கப்படுவதுடன், அவர்களுக்கிடையில் இடம்பெறும் அந்தரங்க செயற்பாடுகள் ஆண்களால் கைத்தொலைபேசிகளில் பதியப்பட்டு தமது ஆண்மையின் பெருமைகளை அவர்கள் மற்றைய ஆண்களுடன் பகிரும் செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அவ்வாறு பகிரப்படும் வீடியோக்களால் அந்த வீடியோவில் உள்ள யுவதியை பல ஆண்கள் அச்சுறுத்தி தம்வசப்படுத்தும் நிலையிலேயே பல யுவதிகள், மாணவிகள் செய்வதறியாது தற்கொலை செய்வதாகவும் தற்கொலைக்கு முயல்வதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

தற்போது யாழ்பல்கலைக்கழகம் மற்றும் வேறு பல்கலைக்கழகங்களில் ராக்கிங் கைத்தொலைபேசிகளில் குறுாப் சற்றிங் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே மிகக் கொடூரமான முறையில் இடம்பெறுகின்றன. இவற்றின் ஆதாரங்கள் சில நாம் இங்கு பகிந்ர்ந்துள்ளோம். அந்த ராங்கிங்குகளில் வட்சப் மற்றும் வைபர் ஊடாக மாணவிகளின் அந்தரங்க உறுப்புக்களை பார்ப்பதற்கும் அவற்றை வீடியோவாக சேமித்து ரசிப்பதற்கும் ஒரு சில காமுக மாணவர்கள் மிக நுணுக்கமாக செயற்பட்டுள்ளார்கள், செயற்படுகின்றார்கள். ( பல்கலைக்கழகத்தில் கற்கும் பெரும்பாலான சீனியர் மாணவர்கள் இவ்வாறான மோசமான நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை என்பது உண்மை). தமது பிள்ளைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் பெற்றோர் அவர்கள் வளர்ந்து விட்டார்கள் என்று நினைத்து அவர்களில் அக்கறை கொள்ளாது விட்டால் நீங்களும் அவமானப்பட்டு உங்கள் பிள்ளையின் வாழ்கையும் கேள்விக்குள்ளாகி விடும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அத்துடன் பெண் பிள்ளைகளின் பெற்றோரே உங்கள் பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு படிக்கும் வரை சிமாட் போன் வைத்திருப்பதை தடை செய்யுங்கள். அல்லாதுவிடின் அவர்களை தொடர் கண்காணிப்புக்கு உள்ளாக்குங்கள். அப்படி நீங்கள் செய்யாது விடின் உங்கள் பிள்ளையின் அந்தரங்க வீடியோக்கள் பலரின் கண்களுக்கு விருந்தாக்கும் நிலைக்கு கொண்டு செல்லலாம். ராக்கிங் முடிந்தும் சில காலங்களுக்கு இரவில் அவர்களின் தொலைபேசியை பிள்ளைகளின் தந்தைகளே அல்லது சகோதரர்களே உங்களுடன் வைத்திருங்கள்.

6) பல்கலைக்கழகங்கள் தவிர்ந்து தொழில்நுட்பக்கல்லுாரிகளிலும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் குறித்த கல்லுாரிகளில் கற்க எடுக்கும் நேரத்தை பெற்றோர் அறிந்து வைத்திருந்து அவர்கள் பிந்தி வரும்போது அதற்கான காரணத்தை நிச்சயம் அறிய வேண்டும் என்பதுடன் அவர்களது கற்றல் செயற்பாடுகளிலும் கவனத்தை செலுத்துதல் அவசியம். அத்துடன் குறித்த கல்லுாரிகளில் கற்று 6 மாத பயிற்சிக்காக அரச அலுவலங்களில் சேரும் சில மாணவிகளை வேட்டையாடுவதற்கும் அந்த அலுவலகங்களிலேயே குறியாக சில அலுவலர்கள் காத்திருக்கின்றார்கள்.

அவர்களில் பலர் அரசியல்செல்வாக்குள் உள்ளவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு அந்த அலுவலகங்களிலேயே நிரந்தர வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக அவர்களுக்கு ஆசையூட்டி அந்த பெண்களை சீரழிக்கின்றார்கள். இவ்வாறு மாணவர்களாயின் அவர்களிடத்தில் காசு கறக்கும் வேலையை பார்க்கின்றார்கள்.

மாதக் குழந்தையாக இருக்கும் தனது மகளுக்கு நுளம்பு கடித்து வரும் தளம்புக்கு கருசணையுடன் பார்மசிகளில் மருந்து தேடித்திரியும் தந்தைகள் உள்ள எமது தமிழர் தாயகத்தில் வயதுக்கு வந்த தனது மகள் தற்கொலை செய்து துாக்கில் தொங்குவதையும் திருமணமாகாது கர்ப்பம் தரித்து நிற்பதையும் பலரால் பாலியல் வேட்டையாடப்பட்டு அவமானப்பட்டு நிற்பதையும் எந்த தந்தையாவது தாங்கிக் கொள்வீர்களா?? உங்கள் பிள்ளைகள் மீது நீங்கள் நுளம்பு வலை போல செயற்பட்டு அவர்களை காப்பாற்றுவது பொறுப்புள்ள உங்களது கடமையாகும்……..

மாணவிகளை அச்சுறுத்தும் வீடியோ

மாணவிகளை அச்சுறுத்தும் வீடியோ

Publiée par Tamil Fun sur Jeudi 6 février 2020

 

Previous Post

இன்றைய ராசிபலன் (07.02.2020)

Next Post

கிளிநொச்சி மற்றும் யாழ் பல்கலைக்கழக ராக்கிங் தொடர்பாக கூறினால்…… மாணவிகளை யாழ் பல்கலைக்கழக காவலிகள் எச்சரிக்கும் காட்சிகள்!! (Video)

Editor

Editor

Related Posts

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்
இலங்கைச் செய்திகள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு
இலங்கைச் செய்திகள்

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி
இலங்கைச் செய்திகள்

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025
கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை
இலங்கைச் செய்திகள்

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு
இலங்கைச் செய்திகள்

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
Next Post
கிளிநொச்சி மற்றும் யாழ் பல்கலைக்கழக ராக்கிங் தொடர்பாக கூறினால்…… மாணவிகளை யாழ் பல்கலைக்கழக காவலிகள் எச்சரிக்கும் காட்சிகள்!! (Video)

கிளிநொச்சி மற்றும் யாழ் பல்கலைக்கழக ராக்கிங் தொடர்பாக கூறினால்…… மாணவிகளை யாழ் பல்கலைக்கழக காவலிகள் எச்சரிக்கும் காட்சிகள்!! (Video)

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025

Recent News

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy