நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லி நடந்து கொண்ட விதம் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 90 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 97 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, அந்தணியின் துவக்க வீரரான டாம் லதம் மற்றும் தலைவரான கானே வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் கடும் ஆக்ரோசத்தை வெளிப்படுத்தினார்.
https://twitter.com/imtheguy007/status/1233980891061522433
இதில் குறிப்பாக அவர் அங்கிருந்த சில ரசிகர்களை நோக்கி, வாயில் விரலை வைத்து அமைதியாக இருக்கும் படி என்பது போல் செய்கை செய்தார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
— faceplatter49 (@faceplatter49) February 29, 2020