மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் (எம்.சி.சி.) கையெழுத்திடுவதை கைவிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை தற்காலிகமானதாகும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் எம்.சி.சி.யானது பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் காய் நகர்த்தல் என்றும் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அது கையெழுத்திடப்படும் அவர் சுட்டிக்காட்டினார்.
எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கைக்கு அமைய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.