சிரியாவின் இட்லிப் மாகாணத்தை இராணுவ படைகளற்ற மண்டலமாக்கும் ஒரு ஒப்பந்தத்தின் கீழ் துருக்கி தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதாக ரஷ்யா குற்றம் சாட்டிய நிலையில், அதற்கு பதிலாக எதிர் படையினருக்கு உதவுவதாக தற்போது மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
இட்லிப்பில் தீவிரவாதிகளுடன் துருக்கி ஒன்றிணைந்ததின் விளைவாக சிரியாவில் உள்ள ரஷ்யாவின் ஹமீமிம் விமானத் தளத்தின் மீது துருக்கி தினசரி தாக்குதல்கள் நடத்தியது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக ஆர்ஐஏ செய்தி நிறுவம் வெளியிட்டுள்ளது.
சர்வதேச சட்டத்தை மீறி துருக்கி இட்லிப்பில் இராணுவ படைகளின் எண்ணிக்கையை குவித்தாக ரஷ்ய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இக்குற்றச்சாட்டுக்கு துருக்கி இராணுவ செய்தித் தொடர்பாளர்கள் பதிலளிக்கவில்லை.
துருக்கியின் ஜனாதிபதி எர்டோகனுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையே வியாழக்கிழமை மாஸ்கோவில் நடந்த கூட்டத்திற்கு முன்னதாக ரஷ்யா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
துருக்கியும்-ரஷ்யாவும் நேரடி இராணுவ மோதல் ஈடுபடும் அளவிற்கு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இருவரும் பதட்டங்களை குறைக்க முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



















