கொரோனாவை கட்டுப்படுத்துவதில் Favipiravir என்ற மருந்து பெரும்பங்கு வகிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தினந்தோறும் ஏதேனும் ஒரு நாட்டில் உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது.
இதுவரை இந்த வைரஸ் காரணமாக 8,961 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் பரவிய நிலையில், அதை அந்நாடு கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.
ஆனால் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், போன்ற நாடுகள் தற்போது கொரோனா பிடியில் சிக்கி தவிக்கின்றன. இதனால் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Fabipiravir என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பதாக அறிவித்துள்ளது.
FUJIFILM நிறுவனத்தின் துணை நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இம்மருந்தால் வுகானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 340 பேர் குணமடைந்திருப்பதாக சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரானோவால் நுரையிரல் பாதிப்பு ஏற்பட்டவர்களில் Favipiravir மருந்து கொடுக்கப்பட்ட 90 சதவீதம் பேருக்கு உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.