பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சக ஊழியருடன் அதிகாரிகள் செல்பி எடுத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானதையடுத்து, அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக பாகிஸ்தானில் இன்று வரை மட்டும் 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவகட்டமைப்பு அந்தளவிற்கு இல்லாத பாகிஸ்தான் அரசு இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஈரான் சென்று திரும்பிய சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடன் சேர்ந்து செல்பி எடுத்த, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள 6 மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட் கிழமையில் இருந்து சிந்து மாகாணத்தில் 15 நாட்கள் பூட்டப்படும் என்று அரசு அறிவித்தது. ஏனெனில் இது நாட்டில் அதிகபட்ச கொரோனா வைரஸ் பதிவுகளை கொண்டிருந்ததால், அரசு இப்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.