இத்தாலியில் முதன் முறையாக, சாவு மற்றும் கொரோனா தொற்றின் விகிதம் வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளது.
அன் நாட்டு அதிபர் எடுத்த அதிரடி முடிவே இதற்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இத்தாலியை முற்று முழுதாக லாக் டவுன் செய்தார் அன் நாட்டு அதிபர்.
உடனே எந்த வித்தியாசத்தையும் அது காட்டவில்லை என்றாலும். கடந்த 2 வாரங்களின் பின்னர் 2வது நாளாக சாவு எண்ணிக்கையில் மற்றும் தொற்று விகிதத்திலும் வீழ்ச்சி உள்ளது.
இது நல்ல செய்தி என்று அனைவரும் வரவேற்றுள்ளார்கள்.
இருப்பினும் லண்டனில் கொரோனா வைரசின் ஆபத்தை இன்னும் உணராத பலர். தாராளமாக வெளியே சென்று கும்மாளம் அடிக்கிறார்கள்.
இதனால் லண்டனில் கொரோனாவை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கப் போகிறது என்று பலரால் எதிர்வு கூறப்பட்டு வந்த நிலையில்.
நேற்றைய தினம்(23) பிரித்தானிய பிரதமர் கடும் நடைமுறைகளை அமுல்படுத்தியுள்ளார். இதனையும் மக்கள் அனுசரிக்கவில்லை என்றால்.
அடுத்தது லாக் டவுனை தவிர வேறு வழி இல்லை என பிரித்தானிய பிரதமர் கூறினாலும் இது நடைமுறையில் இல்லை என கூறப்படுகிறது.