தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தவறாக கருதிய நபர் ஒருவர், மருத்துவரான தனது காதலி மூலமே தனக்கு தொற்று ஏற்பட்டது என எண்ணி அந்த யுவதியின்; கழுத்தை நெறித்துக் கொன்ற கோர சம்பவம் இத்தாலியின் சிசிலியில் இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும் அவர்கள் இருவரிலும் கொரோனா தொற்று பரவியிருக்கவில்லை என ஆரம்பக்கட்ட வைத்திய பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னர் பொலிஸாரை அழைத்த அண் தாதியான 28 வயதான அன்டோனியோ டி பேஸ், தனது காதலியான டாக்டர் லொரேனா குவாட்டனாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
சிசிலி தீவின் மெஸினா நகர வைத்தியசாலையில் பணியாற்றிய இவர்கள் இருவரும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தனர்.

27 வயதான லொரோனா புதிதிதாக வைத்தியவராக பதவியேற்றவர் என்பதுடன் டி பெஸுடன் குடியிருப்பு ஒன்றில் சேர்ந்து வாழ்ந்துவந்தார். அந்தக் குடியிருப்பில் இந்தப் பெண் வைத்தியர் இறந்து கிடந்ததுடன், அருகில் தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்ட டி பெஸும் தரையில் சரிந்து கிடந்தார். துணை மருத்துவர்களும் வைத்தியசாலை ஊழியர்களாலும் காப்பாற்றப்பட்ட டி பேஸ், உள்ளூர் வழக்குதொடுநர் மொரிஸியோ டி லூசியாவிடம், ‘அவள் என்னில் கொரோனாவைப் பரப்பியதால் கொலை செய்தேன்’ என ஒப்புதல் வாக்கமூலம் அளித்துள்ளார்.
இவர்கள் இருவரிலும் கொரோனா தொற்று இருக்கவில்லை என ஆரம்ப வைத்திய பரிசோதனைகள் காட்டின. எனினும் பரிசோதனைகள் தொடர்கின்றன. லொரேனாவின் துயரம்தோய்ந்த மறைவுக்கு சில தினங்களுக்கு முன்னர் அவர் பகிர்ந்தகொண்ட அறிக்கை ஒன்றில், 12,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் பலியானமை குறித்து பெரிதுப்படுத்திக் காட்டியிருந்ததுடன் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.

‘முன்னர் போன்றல்லாமல் நாம் பொறுப்புணர்வை நிரூபிப்பதுடன் வாழ்க்கையை நேசிக்கவேண்டும். அவரவர் அவரவருக்கு மதிப்பளிப்துடன் குடும்பங்களையும் தேசத்தையும் மதிக்கவேண்டும்.
‘நோயுற்றவர்களைப் பராமரிப்பதற்காக அன்றாடம் தங்களது வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் அனைவரையும் நீங்கள் எண்ணிப்பார்த்து நினைவில்கொள்ள வேண்டும். ‘வீட்டில் இருக்கும் அனைவரும் ஒன்றாக இருப்போம். நாம் நேசிப்பவரோ அல்லது நாமோ அடுத்தவர் நோவ்வாய்ப்படுவதைத் தவிர்க்கவேண்டும்’ என லொரேனா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியராக லொரேனா பதவி ஏற்ற பின்னர் டி பேஸ், அவரை வாழ்த்தியிருந்தார். ‘எமது கனவை அடைவதற்கு நீ உறுதியுடன் உழைக்கவேண்டும். அதற்கு நீயே சான்று.
‘நீ உனது கனவுகளை அடைவதற்காக வாழ்த்துகின்றேன். நீ நினைத்த வாழ்க்கையை வாழப் பழகிக்கொள். சிறப்புற செயற்பட்டுள்ளாய்’ என டி பேஸ் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவைப் பார்த்தவர்கள் அவர்மீது கடுஞ்சினங்கொண்டுள்ளதுடன் ஒருவர் அவரை சாடியும் உள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்று நோய் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் லொரேனாவின் இறுதிச் சடங்குகளை விரைவாக நடத்தி முடிக்கவேண்டும் என அவரது துயரம்தோய்ந்த பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. (என்.வீ.ஏ.)


















