ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாஸ சந்தித்து கலந்துரையாடி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன் ஆரம்பமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான ரஞ்ஜித் மத்தும பண்டாரவும் கலந்துகொண்டிருக்கின்றார்.
நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சஜித் அணி தனது யோசனைகளை ஜனாதிபதியிடம் இன்று முன்வைப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இச்சந்திப்பு நடைபெற்று வருகின்றது.