கொரோனாவுக்கு எதிராக சோதனைக்குரிய ஆன்டிவைரல் மருந்தான ‘ரெமெடிசிவர்’ குரங்குகளிடம் நடத்தப்பட்ட சிறிய பரிசோதனையில் பயனுள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு வேண்டுமென்றே கொரோனா பாதிப்பு ஏற்படுத்தப்பட்ட ஆறு ரீசஸ் மக்காக்களின் இன குரங்குகளின் இரண்டு குழுக்களிடம் சோதனை நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் ஆறு குரங்குகள் கொண்ட ஒரு குழுவுக்கு கிலியட் சயின்ஸால் உருவாக்கப்பட்ட மருந்து அளிக்கப்பட்டது மற்ற குழுவுக்கு மருந்து அளிக்கப்படவில்லை.
மருந்தைப் பெறும் குழுவானது நோய்த்தொற்று பாதித்த 12 மணி நேரத்திற்குப் பிறகு மருந்தின் முதல் டோஸை பெற்றது, பின்னர் ஒவ்வொரு நாளும் ஆறு நாட்களுக்கு தொடர்ந்து மருந்து அளிக்கப்பட்டது.
குரங்குகளின் நுரையீரலில் வைரஸ் மிக உயர்ந்த நிலையை அடைவதற்கு சற்று முன்னர் விஞ்ஞானிகள் ஆரம்ப சிகிச்சையை மேற்கொண்டனர்.
சிகிச்சையளிக்கப்பட்ட விலங்குகள் முதல் டோஸுக்கு 12 மணி நேரத்திற்குப் பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டின, இது ஒரு வாரம் நீடித்த ஆய்வில் இந்த முன்னேற்றம் தொடர்ந்தது.
சிகிச்சையளிக்கப்பட்ட ஆறு விலங்குகளில் ஒன்று லேசான சுவாசக் கஷ்டத்தைக் காட்டியது, சிகிச்சை அளிக்கப்படாத ஆறு குரங்குகளுக்கும் தொடர் மற்றும் கடினமான சுவாச பிரச்சனைகள் இருந்தது.
சிகிச்சையளிக்கப்படாத குழுவோடு ஒப்பிடும்போது சிகிச்சையளிக்கப்பட்ட குழுவில் நுரையீரலில் காணப்படும் வைரஸின் அளவு கணிசமாகக் குறைவாக இருந்தது.
கொரோனா வைரஸ்க்கான சிகிச்சையாக வடிவமைக்கப்பட்ட முதல் மருந்துகளில் ரெம்ட்சிவிர் ஒன்றாகும், மேலும் அதன் மருத்துவ பரிசோதனைகள் மேம்பட்ட கட்டத்தில் உள்ளன.
சிகாகோ மருத்துவமனையில் இந்த மருந்து பெரும் செயல்திறனைக் காட்டியதாக சுகாதார செய்தி வலைத்தளம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.