ஜனாதிபதி சட்டத்தரணி .வி தவராசா (இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சட்டத்துறை செயலாளர் ) ஏற்கனவே இந்த வழக்கினை நீதிமன்றம் மீளவும் ஆரம்பிக்கும் தருவாயில் முன்னெடுக்கவுள்ளதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார் .
அதற்கு பலத்த வரவேற்பும் கிடைத்திருந்தது . ஏனெனில் அவர் அதனை எப்படியும் வெற்றிகொள்வாரென்பது சட்டம் தெரிந்த அனைவரும் அறிந்த உண்மை .
இந்த உண்மையை மாகாணசபை உறுப்பினர், பிரதேச சபை தவிசாளர் பதவிகளுக்காக எந்த அளவுக்கும் இறங்கி செம்பு தூக்குபவர்கள் சிலர் அறியாமல் இருக்கக்கூடும் .
தற்போது கொரோனா காலத்தினுள்ளும் மிகுந்த சிரமத்தின் மத்தியில் அண்மையில் ஊரடங்கு காலத்தில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி இஜாஸ் தொடர்பான வழக்கினை முன்னெடுத்து வருகின்றார் .
சில நாட்களின் பின்னர் நீதிமன்றம் முழுமையாக வழமைக்கு திரும்பும் போது மிருசுவில் கொலையாளி ரத்நாயக்க தொடர்பான வழக்கினை முன்னெடுக்க காத்திருந்தார் .
இந்நிலையில் நேற்றைய தினம் இந்த கூத்தினை இந்த தரப்பு மேற்கொண்டுள்ளது . இதுவரை காலமும் ஒரு அரசியல் கைதிக்காகவேனும் ஆதரவாக நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யாதவரே இந்த சயந்தன் எனும் சாதாரண சட்டத்தரணி .
நான் பகிரங்கமாக சவால் விடுக்கின்றேன் . உயர்நீதிமன்றில் 34 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் நிலுவையிலுள்ளன.
அவற்றில் பெரும்பாலானவற்றினை ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா கையாண்டு வருகின்றார் .
இதுவரை காலமும் ஒரு அரசியல் கைதியையேனும் உயர்நீதிமன்றில் வாதாடி விடுவித்திராத ஜனாதிபதி சட்டத்தரணி ஆப்பிரகாம் சுமந்திரன் இவற்றினை பாரமெடுத்து முன்னெடுப்பாரா ? இல்லையேல் தவராசா முன்னெடுத்து வந்த ரவிராஜ் வழக்கினை இடையில் புகுந்து வழக்கினை தோல்வியடையச்செய்தமை போன்று நாறடிப்பாரா ? யாழ் தீவக பகுதி தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் குணாலன் அவர்கள் தனது முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதை விடுத்த பல விமர்சனங்களும் எழுந்துள்ளன இன்றைய தமிழர் அரசியலில் மன நோயுடன் அலையும் ஒருவரே சுமந்திரன் 1979ம் ஆண்டு காலப்பகுதியில் நீலன் திருச்செல்வம் எப்படி சட்ட மேதை எனக் கூறி ஒட்டு மொத்த தமிழனையும் முட்டாள் ஆக்கினாரோ அதற்கு சற்றும் குறையாமல் சுமந்திரன் மறு அவதாரம் எடுத்துள்ளார்.
சட்டத்தரணி தவராசாவை பற்றி புகழவில்லை மாறாக அவரால் மிருசுவில் கொலையாளி ரத்நாயக்க தொடர்பான வழக்கு தொடுக்கப் படும் என பகிரங்கமாக கூறப்பட்ட நிலையில் சைக்கோ போன்று ஒரு கட்சிக்குள் இருந்து எதுவும் கதைக்காமல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதென்றால் இதை விடக் கேவலம் வேறு என்ன.
பரம்பரை கிறிஸ்தவர் அல்லாத அனைவரும் சுவிஸ் போதகர் போன்று திமிர் பிடித்து அலைவர் என்பதற்கு சுமந்திரன் மிக நல்ல சான்று அது அவர்களின் மதம் போதிக்கும் அடிப்படைக் கோட்பாடு…
கூட்டமைப்பில் உள்ள தலைவர்கள் எல்லாம் வானத்தை பார்த்துக் கொண்டிருந்தால் வெகு விரைவில் தமிழர் அனைவரையும் கோவனத்துடன் நடுத் தெருவில் சுமந்திரன் விட்டு.. விட்டு.. கொழும்பிற்கு ஓடுவார் என்பது மட்டும் உண்மை… எனமற்றுமெரு கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
ஒட்டு மொத்தத்தில் தமிழனிற்கு தீர்வு கிடைக்கிறதோ… இல்லையோ கூட்டமைப்பை அழித்து முடிக்காமல் சுமந்திரன் ஓயமாட்டார் என மேலும் தெரிவித்தார்.



















