இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சனை சுற்றி சர்ச்சைகள் கிளம்பியதற்கு ஐபிஎல் போட்டிகளில் அதிக விலைக்கு ஏலம் போனதே காரணம் என கூறியுள்ளார் முன்னாள் அணித்தலைவரான மைக்கேல் வாஹன்.
2009ம் ஆண்டில் ஐபிஎல் தொடரின் இரண்டாவது சீசனில் ரூ.7.55 கோடிக்கு ஏலம் போனார் கெவின் பீட்டர்சன்.
இதை அப்போதைய அணியில் இருந்த ஒரு சில வீரர்களால் ஜீரணிக்க முடியவில்லை, அணிக்குள் சர்ச்சை வெடித்தது.
இப்போது வீரர்கள் அதை மறுக்கலாம், அப்போது பொறாமை இருந்தது உண்மை தான்.
போட்டிகளுக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் விளையாடினால் அனுபவம் கிடைக்கும் என கெவின் பீட்டர்சன் கூறினார், ஆனால் அவர் பணத்துக்காக செல்வதாக மற்றவர்கள் நினைத்தனர்.
இதிலிருந்து தான் பிரச்சனை ஆரம்பித்தது, 2012ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு பீட்டர்சன் மெசேஜ் அனுப்பியதாக எழுந்த சர்ச்சைக்கு இதுவே காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.