பல்பொருள் அங்காடி ஒன்றில் கடந்த 5 ஆம் திகதி நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பலியான 88 வயது தேவாலய வார்டனின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜான் ரீஸ் என்ற அந்த தேவாலய வார்டன் தமது மனைவியை காருக்குள் காத்திருக்க செய்துவிட்டு, Pen-y-Graig பகுதியில் அமைந்துள்ள அங்காடி ஒன்றில் பொருட்கள் வாங்க வரிசையில் நின்றுள்ளார்.
திடீரென்று யுவதி ஒருவர் கத்தியால் அங்கிருந்த பொதுமக்களை தாக்கத் தொடங்கியதில், முதியவர் ரீஸ், கழுத்தில் ஆழமான காயம்பட்டு சம்பவயிடத்தில் சரிந்துள்ளார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய யுவதி மன நலம் பாதிக்கப்பட்டவர் என பின்னர் தெரியவந்தது. ரீஸ் மட்டுமின்றி மேலும் மூன்று பேர் இந்த கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் 29 வயதான Zara Radcliffe என்பவர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

மேலும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இன்று வீடியோ அழைப்பு மூலம் நீதிமன்ற விசாரணையை அவர் எதிர்கொண்டுள்ளார்.
ஒரு குழந்தைக்கு தாயாரான Zara Radcliffe சமீபத்தில் தான் மன நல காப்பகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார் என கூறப்படுகிறது.
மரணமடைந்த ரீஸ், மிகவும் நல்ல மனிதர் எனவும், அப்பகுதி மக்களால் மிகவும் மதிக்கப்படுபவர் எனவும் கூறப்படுகிரது.



















